| ன் கழைஅளந்து அறியாக் காவிரிப் படப்பை, புனல்மலி புதவின், போஒர் கிழவோன், பழையன் ஓக்கிய வேல்போல், பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே! எது தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர். 'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும், நன்பகல் அமையமும் இரவும் போல, வேறுவேறு இயல ஆகி, மாறுஎதிர்ந்து, உள' என உணர்ந்தனை ஆயின், ஒரூஉம் இன்னா வெஞ்சுரம், நல்நசை துரப்ப, துன்னலும் தகுமோ? - துணிவு இல்நெஞ்சே! - நீசெல வலித்தனை ஆயின், யாவதும் நினைதலும் செய்தியோ எம்மே - கனைகதிர் ஆவி அவ்வரி நீரஎன நசைஇ, மாதவப் பரிக்கும் மரல்திரங்கு நனந்தலை, களர்கால் யாத்த கண்அகன் பரப்பின் செவ்வரைக் கொழிநீர் கடுப்ப, அரவின் அவ்வரி உரிவை அணவரும் மருங்கின், புற்றுஅரை யாத்த புலர்சினை மரத்த, மைந்நிற உருவின், மணிக்கண், காக்கை பைந்நிணம் கவரும் படுபிணக் கவலைச் சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர், கோழ்கழிபு இரங்கும் அதர, வேய்பயில் அழுவம் இறந்த பின்னே? |
| வழைஅமல் அடுக்கத்து, வலன்ஏர்பு, வயிரியர் முழவுஅதிர்ந் தன்ன முழக்கத்து ஏறோடு, உரவுப்பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து, அரவின் பைந்தலை இடறி, பானாள் இரவின் வந்து,எம் இடைமுலை முயங்கி, |