அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   297
Zoom In NormalZoom Out


 

ஓலை எண்: 297
 

துனிகண் அகல அளைஇ, கங்குலின்
இனிதின் இயைந்த நண்பு, அவர்முனிதல்
தெற்றுஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின்,
இலங்குவளை நெகிழ, பரந்துபடர் அலைப்ப, யாம்
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்துகொண்டு
அடக்குவம் மன்னோ - தோழி! - மடப்பிடி
மழைதவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று,
கழைதின் யாக்கை விழைகளிறு தைவர,
வாழைஅம் சிலம்பில் துஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பே!
 
 

எது இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள்
சொல்லியது. -மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்.
 

  
பூங்கணும் நுதலும் பசப்ப, நோய்கூர்ந்து,
ஈங்குயான் வருந்தவும், நீங்குதல் துணிந்து,
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர் -
குவிந்த குரம்பை அம்குடிச் சீறூர்,
படுமணி இயம்பப் பகல்இயைந்து, உமணர்
கொடுநுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகைப்
பகடுஅயாக் கொள்ளும் வெம்முனைத் துகள்தொகுத்து,
எறிவளி சுழற்றும் அத்தம், சிறிதுஅசைந்து,
ஏகுவர் கொல்லோ தாமே - பாய்கொள்பு,
உறுவெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை
நெடுநல் யானை நீர்நசைக்கு இட்ட
கைகறித்து உரறும் மைதூங்கு இறும்பில்,
புலிபுக்கு ஈனும் வறுஞ்சுனை,
பனிபடு சிமையப் பல்மலை இறந்தே?
 
 

எது பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - உறையூர்
முதுகூத்தனார்.