அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   298
Zoom In NormalZoom Out


 
கழிப்பூக் குற்றும், கானல் அல்கியும்,
வண்டற் பாவை வரிமணல் அயர்ந்தும்,
இன்புறப் புணர்ந்தும், இளிவரப் பணிந்தும்,
தன்துயர் வெளிப்படத் தவறி, நம்துயர்
அறியா மையின், அயர்ந்த நெஞ்சமொடு
செல்லும், அன்னோ; மெல்அம் புலம்பன்!
செல்வோன் பெயர்புறத்து இரங்கி, முன்நின்று,
தகைஇய சென்றஎன் நிறைஇல் நெஞ்சம்
எய்தின்று கொல்லோ தானே? எய்தியும்,
காமம் செப்ப, நாண்இன்று கொல்லோ?
உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே;
குப்பை வெண்மணற் குவவுமிசை யானும்,
எக்கர்த் தாழை மடல்வயி னானும்,
ஆய்கொடிப் பாசடும்பு பரிய ஊர்புஇழிபு,
சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த
கடுஞ்செலல் கொடுந்திமில் போல,
நிவந்துபடு தோற்றமொடு இகந்துமா யும்மே!
 
 

எது தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறைநயப்பக்
கூறியது. -உலோச்சனார்.
 

  
நீடுநிலை அரைய செங்குழை இருப்பை,
கோடுகடைந் தன்ன, கொள்ளை வான்பூ,
ஆடுபரந் தன்ன, ஈனல் எண்கின்
தோடுசினை உரீஇ உண்ட மிச்சில்
பைங்குழைத் தழையர் பழையர் மகளிர்
கண்திரள் நீள்அமைக் கடிப்பின் தொகுத்து,
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
சீறூர் நாடுபல பிறக்கு ஒழிய,
சென்றோர் அன்புஇலர் - தோழி! என்றும்,
அருந்துறை