அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   299
Zoom In NormalZoom Out


 
முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாணர் ஆர்ப்ப, பல்கலம் உதவி,
நாளவை இருந்த நனைமகிழ்த் திதியன்,
வேளிரொடு பொரீஇய, கழித்த
வாள்வாய் அன்ன வறுஞ்சுரம் இறந்தே!
 
 

எது தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்.
 

  
முளைவளர் முதல மூங்கில் முருக்கி,
கிளையொடு மேய்ந்த கேழ்கிளர் யானை,
நீர்நசை மருங்கின் நிறம்பார்த்து ஒடுங்கிய,
பொருமுரண் உழுவை தொலைச்சி, கூர்நுனைக்
குருதிச் செங்கோட்டு அழிதுளி கழாஅ,
கல்முகை அடுக்கத்து மென்மெல இயலி,
செறுபகை வாட்டிய செம்மலொடு, அறுகால்
யாழ்இசைப் பறவை இமிர, பிடிபுணர்ந்து,
வாழைஅம் சிலம்பில் துஞ்சும் நாடன்
நின்புரைத் தக்க சாயலன் என, நீ
அன்புஉரைத்து அடங்கக் கூறிய இன்சொல்
வாய்த்தன - வாழி, தோழி! - வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ்தார் மார்பின்
வண்டுஇடைப் படாஅ முயக்கமும்,
தண்டாக் காதலும், தலைநாள் போன்மே!
 
 

இது இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட
மொழிந்தது. -கபிலர்.
 

  
'யாஅ ஒண்தளிர் அரக்குவிதிர்த் தன்னநின்
ஆக மேனி அம்பசப்பு ஊர,
அழிவுபெரிது உடையை யாகி, அவர்வயின்
பழி