அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   300
Zoom In NormalZoom Out


 
தலைத் தருதல் வேண்டுதி; மொழிகொண்டு
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்குநின்
எவ்வம் பெருமை உரைப்பின்; செய்பொருள்
வயங்காது ஆயினும் பயம்கெடத் தூக்கி,
நீடலர் - வாழி, தோழி! - கோடையில்,
குருத்துஇறுபு உக்க வருத்தம் சொலாது,
தூம்புடைத் துய்த்தலை கூம்புபு திரங்கிய,
வேனில், வெளிற்றுப் பனைபோலக் கைஎடுத்து,
யானைப் பெருநிரை வானம் பயிரும்
மலைசேண் இகந்தனர் ஆயினும், நிலைபெயர்ந்து,
நாள்இடைப் படாமை வருவர், நமர்' என,
பயம்தரு கொள்கையின் நயம்தலை திரியா
நின்வாய் இன்மொழி நன்வா யாக
வருவர் ஆயினோ நன்றே; வாராது,
அவணர் காதலர் ஆயினும், இவண்நம்
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல -
சென்ற தேஎத்துச் செய்வினை முற்றி,
மறுதரல் உள்ளத்தர் எனினும்,
குறுகுபெரு நசையொடு தூதுவரப் பெறினே.
 
 

எது பிரிவிடை  வற்புறுத்தும்  தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
கல்லாடனார்.
 

  
ஓடா நல்ஏற்று உரிவை தைஇய
ஆடுகொள் முரசம் இழுமென முழங்க,
நாடுதிறை கொண்டனம் ஆயின் - பாக! -
பாடுஇமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
பெருங்களிற்றுத் தடக்கை புரையக்கால் வீழ்த்து,
இரும்பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ,
வணங்குஇறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்குஉறழ் ஆலியொடு கதழ்உறை சிதறி,
பெயல்தொடங் கின்