| றால், வானம்; வானின் வயங்குசிறை அன்னத்து நிரைபறை கடுப்ப, நால்குஉடன் பூண்ட கால்நவில் புரவிக் கொடிஞ்சி நெடுந்தேர் கடும்பரி தவிராது, இனமயில் அகவும் கார்கொள் வியன்புனத்து, நோன்சூட்டு ஆழி ஈர்நிலம் துமிப்ப, ஈண்டே காணக் கடவுமதி - பூங்கேழ்ப் பொலிவன அமர்த்த உண்கண், ஒலிபல் கூந்தல் ஆய்சிறு நுதலே! |
| இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அருள்நன்கு உடையர் ஆயினும், ஈதல் பொருள்இல் லோர்க்கு அஃதுஇயை யாதுஆகுதல் யானும் அறிவென் மன்னே; யானைதன் கொல்மருப்பு ஒடியக் குத்தி, சினம்சிறந்து, இன்னா வேனில் இன்துணை ஆர, முளிசினை மராஅத்துப் பொளிபிளந்து ஊட்ட, புலம்புவீற் றிருந்த நிலம்பகு வெஞ்சுரம் அரிய அல்லமன், நமக்கே - விரிதார் ஆடுகொள் முரசின் அடுபோர்ச் செழியன் மாட மூதூர் மதிற்புறம் தழீஇ, நீடுவெயில் உழந்த குறியிறைக் கணைக்கால், தொடைஅமை பன்மலர்த் தோடுபொதிந்து யாத்த குடைஓ ரன்ன கோள்அமை எருத்தின் பாளைபற்று அழிந்து ஒழிய, புறம்சேர்பு, வாள்வடித் தன்ன வயிறுடைப் பொதிய, நாள்உறத் தோன்றிய நயவரு வனப்பின், ஆரத்து அன்ன அணிகிளர் புதுப்பூ வார்உறு கவரியின் வண்டுஉண விரிய, முத்தின் அன்ன வெள்வீ தாஅய், அலகின் அன்ன அரிநிறத்து ஆலி நகைநனி வளர்க்கும் |