அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   302
Zoom In NormalZoom Out


 
சிறப்பின், தகைமிகப்
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்
நீரினும் இனிய ஆகி, கூர்எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ்வாய்,
ஒண்தொடி, குறுமகட் கொண்டனம் செலினே! 
 

எது தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு
அழுங்கியது. - மதுரைத் தத்தங்கண்ணனார்.
 

 
குழற்கால் சேம்பின் கொழுமடல் அகல்இலைப்
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
நாள்இரை தரீஇய எழுந்த நீர்நாய்
வாளையொடு உழப்ப, துறைகலுழ்ந் தமையின்,
தெண்கட் தேறல் மாந்தி, மகளிர்
நுண்செயல் அம்குடம் இரீஇ, பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ்இணர்க்
காஞ்சிநீழல் குரவை அயரும்
தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன்
தேர்தர வந்த நேர்இழை மகளிர்
ஏசுப என்ப, என்நலனே; அதுவே
பாகன் நெடிது உயிர்வாழ்தல் காய்சினக்
கொல்களிற்று யானை நல்கல் மாறே;
தாமும் பிறரும் உளர்போல் சேறல்
முழவுஇமிழ் துணங்கை தூங்கும் விழவின்,
யான்அவண் வாராமாறே; வரினே, வானிடைச்
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல,
என்னொடு திரியானாயின், வென்வேல்
மாரி அம்பின் மழைத்தோற் சோழர்
வில்ஈண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை,
ஆரியர் படையின் உடைக, என்
நேர்இறை முன்கை வீங்கிய வளையே! 
 

எது நயப் புப்பரத்தை