அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   303
Zoom In NormalZoom Out


 

இற்பரத்தைக்குப்  பாங்காயினார்  கேட்பச்  சொல்லியது.  -  பாவைக்
கொட்டிலார்.
 

 
'சாரல் யாஅத்து உயர்சினை குழைத்த
மாரி ஈர்ந்தளிர் அன்ன மேனி,
பேர்அமர் மழைக்கண், புலம்புகொண்டு ஒழிய,
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிதுஅன்று; ஆகலின்
அவணது ஆக, பொருள்என்று, உமணர்
கணநிரை அன்ன, பல்கால், குறும்பொறை,
தூதுஒய் பார்ப்பான் மடிவெள் ஓலைப்
படையுடைக் கையர் வருதொடர் நோக்கி,
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது
பொன்ஆ குதலும் உண்டு' என, கொன்னே
தடிந்துஉடன் வீழ்த்த கடுங்கண் மழவர்,
திறன்இல் சிதாஅர் வறுமை நோக்கி,
செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயர,
கொடிவிடு குருதித் தூங்குகுடர் கறீஇ,
வரிமரல் இயவின் ஒருநரி ஏற்றை,
வெண்பரல் இமைக்கும் கண்பறி கவலை,
கள்ளி நீழல் கதறுபு வதிய,
மழைகண் மாறிய வெங்காட்டு ஆர்இடை,
எமியம் கழிதந் தோயே - பனிஇருள்
பெருங்கலி வானம் தலைஇய
இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே! 
 

எது  முன்னொரு  காலத்துப்  பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன்
பின்னும்  பொருள்  கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை
பாடிய பெருங்க