அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   305
Zoom In NormalZoom Out


 
ற்பட
ஆள்வினைக்கு எழுந்த அசைவுஇல் உள்ளத்து
ஆண்மை வாங்க, காமம் தட்ப,
கவைபடு நெஞ்சம்! கண்கண் அகைய,
இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி,
ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்;
நோம்கொல்? அளியள் தானே - யாக்கைக்கு
உயிர்இயைந் தன்ன நட்பின், அவ்உயிர்
வாழ்தல் அன்ன காதல்,
சாதல் அன்ன பிரிவு அரியோளே! 
 

எது போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - நரைமுடி
நெட்டையார்.
 

 
பல்நாள் எவ்வம் தீர, பகல்வந்து,
புன்னைஅம் பொதும்பின் இன்நிழல் கழிப்பி,
மாலை மால்கொள நோக்கி, பண்ஆய்ந்து,
வலவன் வண்தேர் இயக்க, நீயும்
செலவுவிருப் புறுதல் ஒழிகதில் அம்ம -
'செல்லா நல்இசை, பொலம்பூண், திரையன்
பல்பூங் கானற் பவத்திரி அன்னஇவள்
நல்எழில் இளநலம் தொலைய, ஒல்லென,
கழியே ஓதம் மல்கின்று; வழியே
வள்எயிற்று அரவொடு வயமீன் கொட்கும்;
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது' என,
நின்திறத்து அவலம் வீட, இன்றுஇவண்
சேப்பின் எவனோ - பூக்கேழ் புலம்ப! -
பசுமீன் நொடுத்த வெண்நெல் மாஅத்
தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே;
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டுஇமிர் நறுஞ்சாந்து அணிகுவம் - தி