அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   306
Zoom In NormalZoom Out


 
ண் திமில்
எல்லுத்தொழில் மடுத்த வல்வினைப் பரதவர்
கூர்உளிக் கடுவிசை மாட்டலின், பாய்புஉடன்,
கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை
தண்கடல் அசைவளி எறிதொறும், வினைவிட்டு,
முன்றில் தாழைத் தூங்கும்
தெண்கடற் பரப்பின், எம் உறைவுஇன், ஊர்க்கே?
 

எது பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர்
 

 
உய்தகை இன்றால் - தோழி! - பைபய,
கோங்கும் கொய்குழை உற்றன; குயிலும்
தேம்பாய் மாஅத்து ஓங்குசினை விளிக்கும்;
நாடுஆர் காவிரிக் கோடுதோய் மலிர்நிறைக்
கழைஅழி நீத்தம் சாஅய வழிநாள்,
மழைகழிந் தன்ன மாக்கால் மயங்குஅறல்,
பதவுமேயல் அருந்து துளங்குஇமில் நல்ஏறு,
மதவுடை நாக்கொடு அசைவீடப் பருகி,
குறுங்காற் காஞ்சிக் கோதை மெல்இணர்ப்
பொன்தகை நுண்தாது உறைப்ப, தொக்குஉடன்,
குப்பை வார்மணல் எக்கர்த் துஞ்சும்,
யாணர் வேனில் மன்இது -
மாண்நலம் நுகரும் துணைஉடை யோர்க்கே? 
 

எது  பிரிவின்கண்  தோழிக்குத்  தலைமகள்  சொல்லியது. -  ஆவூர்
மூலங்கிழார்.
 

 
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை;
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு