| யான் கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! - தெனாஅது வெல்போர்க் கவுரியர் நல்நாட்டு உள்ளதை மண்கொள் புற்றத்து அருப்புஉழை திறப்பின் ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன், ஏவல் இளையர் தலைவன், மேவார் அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்துபடப் பல்செருக் கடந்த செல்உறழ் தடக்கை, கெடாஅ, நல்இசைத் தென்னன், தொடாஅ நீர்இழி மருங்கில் கல்அளைக் கரந்தஅவ் வரையர மகளிரின் அரியள், அவ்வரி அல்குல் அணையாக் காலே! |
| வாங்குஅமை புரையும் வீங்குஇறைப் பணைத்தோள், சில்சுணங்கு அணிந்த, பல்பூண், மென்முலை, நல்எழில், ஆகம் புல்லுதல் நயந்து, மரம்கோள் உமண்மகன் பேரும் பருதிப் புன்தலை சிதைத்த வன்தலை நடுகல் கண்ணி வாடிய மண்ணா மருங்குல், கூர்உளி குயின்ற கோடுமாய் எழுத்து,அவ் ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும் கண்பொரி கவலைய கானத்து ஆங்கண், நனந்தலை யாஅத்து அம்தளிர்ப் பெருஞ்சினை, இல்போல் நீழல் செல்வெயில் ஒழிமார், நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப் புறம்நிறை பண்டத்துப் பொறைஅசாஅக் களைந்த பெயர்படை கொள்ளார்க்கு உயவுத்துணை ஆகி, உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; |