| பெயர்ந்து நின்று, உள்ளினை - வாழி, என் நெஞ்சே! - கள்ளின் மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண், சில்மொழிப் பொலிந்த துவர்வாய், பல்மாண் பேதையின் பிரிந்த நீயே. |
|
எது தலைமகன்
இடைச் சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறிப்
போயது. -மதுரை மருதன் இளநாகனார்.
|
| வளமழை பொழிந்த வால்நிறக் களரி, உளர்தரு தண்வளி உறுதொறும், நிலவுஎனத் தொகுமுகை விரிந்த முடக்காற் பிடவின், வைஏர் வால்எயிற்று, ஒள்நுதல், மகளிர் கைமாண் தோணி கடுப்ப, பையென, மயிலினம் பயிலும் மரம்பயில் கானம் எல்இடை உறாஅ அளவை, வல்லே, கழல்ஒலி நாவின் தெண்மணி கறங்க, நிழல் ஒளிப்பன்ன நிமிர்பரிப் புரவி வயக்குஉறு கொடிஞ்சி பொலிய, வள்புஆய்ந்து, இயக்குமதி - வாழியோ, கையுடை வலவ! - பயப்புறு படர்அட வருந்திய நயப்புஇன் காதலி நகைமுகம் பெறவே! |
|
எது வினைமுற்றிய
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை
அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்.
|
| 'விசும்புதளி பொழிந்து, வெம்மை நீங்கி, தண்பதம் படுதல் செல்க!' எனப் பல்மாண் நாம்செல விழைந்தன மாக, 'ஓங்குபுகழ்க் கான்அமர் செல்வி அருளலின், வெண்கால், பல்படைப் புரவி எய்திய தொல்இசை நுணங்குநுண் பனுவற் புலவன் பாடிய இனமழை தவழும் ஏழிற் குன்றத்து, |
|  |