அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   309
Zoom In NormalZoom Out


 
கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல்
ஐது ஏந்து அல்குல்யாம் அணிந்து உவக்கும்
சில்நாள் கழிக!' என்று முன்நாள்
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு
திருந்துவேல் இளையர் சுரும்புஉண மலைமார்,
மாமுறி ஈன்று மரக்கொம்பு அகைப்ப,
உறைகழிந்து உலந்த பின்றை, பொறைய
சிறுவெள் அருவித் துவலையின் மலர்ந்த
கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான்பூச்
செம்மணற் சிறுநெறி கம்மென வரிப்ப,
காடுகவின் பெறுக - தோழி! - ஆடுவளிக்கு
ஒல்குநிலை இற்றி ஒருதனி நெடுவீழ்
கல்கண் சீக்கும் அத்தம்,
அல்குவெயில் நீழல் அசைந்தனர் செலவே!
 

தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்.
 

 
நகைநன்று அம்ம தானே - இறைமிசை
மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும்பறைச் சேவல்,
வெள்ளி வெண்தோடு அன்ன, கயல்குறித்து,
கள்ஆர் உவகைக் கலிமகிழ் உழவர்
காஞ்சிஅம் குறுந்தறி குத்தி, தீம்சுவை
மென்கழைக் கரும்பின் நன்பல மிடைந்து,
பெருஞ்செய் நெல்லின் பாசுஅவல் பொத்தி,
வருத்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை
மீதுஅழி கடுநீர் நோக்கி, பைப்பயப்
பார்வல் இருக்கும் பயம்கேழ் ஊர! -
யாம்அது பேணின்றோ இலமே - நீநின்
பண்அமை நல்யாழ்ப் பாணனொடு, விசிபிணி,
மண்ஆர், முழவின் கண்அதிர்ந்து இயம்ப,
மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி,
எம்மனை வாரா யாகி, முன்நாள்,
நும்