அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   310
Zoom In NormalZoom Out


 
மனைச் சேர்ந்த ஞான்றை, அம்மனைக்
குறுந்தொடி மடந்தை உவந்தனள் - நெடுந்தேர்,
இழைஅணி யானைப் பழையன் மாறன்,
மாடமலி மறுகின் கூடல் ஆங்கண்,
வெள்ளத் தானையொடு வேறுபுலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல்அமர் சாஅய்,
கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி,
ஏதில் மன்னர் ஊர்கொள,
கோதை மார்பன் உவகையின் பெரிதே. 
 

எது தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர்.
 

 
தோளும் தொல்கவின் தொலைய, நாளும்
நலம்கவர் பசலை நல்கின்று நலிய,
சால்பெருந் தானைச் சேர லாதன்
மால்கடல் ஓட்டி, கடம்புஅறுத்து, இயற்றிய
பண்அமை முரசின் கண் அதிர்ந் தன்ன,
கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர்நமக்கு ஒழிய,
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே
வாய்க்கதில் - வாழி, தோழி! - வாயாது,
மழைகரந்து ஒளித்த கழைதிரங்கு அடுக்கத்து,
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென, குவவுஅடி
வெண்கோட்டு யானை முழக்குஇசை வெரீஇ,
கன்றுஒழித்து ஓடிய புன்தலை மடப்பிடி
கைதலை வைத்த மையல் விதுப்பொடு,