| கெடுமகப் பெண்டிரின் தேரும் நெடுமர மருங்கின் மலைஇறந் தோரே! |
|
எது தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
மாமூலனார்.
|
| என்ஆ வதுகொல் தானே - முன்றில், தேன்தேர் சுவைய, திரள்அரை, மாஅத்து, கோடைக்கு ஊழ்த்த, கமழ்நறுந் தீம்கனி, பயிர்ப்புறப் பலவின் எதிர்ச்சுளை அளைஇ, இறாலொடு கலந்த, வண்டுமூசு, அரியல் நெடுங்கண் ஆடு அமைப் பழுநி, கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான்கோட்டுக் கடவுள் ஓங்குவரைக்கு ஓக்கி, குறவர், முறித்தழை மகளிர் மடுப்ப, மாந்தி, அடுக்கல் ஏனல் இரும்புனம் மறந்துழி, 'யானை வவ்வின தினை' என, நோனாது, இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, சிலைஆய்ந்து திரிதரும் நாடன் நிலையா நல்மொழி தேறிய நெஞ்சே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி சொல்லெடுப்ப, தலைமகள்
சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்.
|
| அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கை வரைந்துதாம் பிணித்த தொல்கவின் தொலைய, எவன்ஆய்ந் தனர்கொல் - தோழி! - ஞெமன்ன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி, உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே, உரன்மலி உள்ளமொடு முனைபா ழாக, அருங்குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை சூழாது சுரக்கும் நன்னன் நல்நாட்டு, எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ்கொள, திருந்துஅரை நிவந்த கருங்கால் வேங்கை எரிமருள் கவளம் மாந்தி, களிறு |
|  |