அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   312
Zoom In NormalZoom Out


 
தன்
வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை
கல்ஊர் பாம்பின் தோன்றும்
சொல்பெயர் தேஎத்த சுரன்இறந் தோரே? 
 

எது  தலைமகன்  பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்.
 

 
கழியே, சிறுகுரல் நெய்தலொடு காவி கூம்ப,
எறிதிரை ஓதம் தரல்ஆ னாதே;
துறையே, மருங்கின் போகிய மாக்கவை மருப்பின்
இருஞ்சேற்று ஈர்அளை அலவன் நீப்ப,
வழங்குநர் இன்மையின் பாடுஆன் றன்றே;
கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடிமணி நெடுந்தேர் பூண ஏவாது,
ஏந்துஎழில் மழைக்கண் இவள்குறை யாகச்
சேந்தனை சென்மோ - பெருநீர்ச் சேர்ப்ப! -
இலங்குஇரும் பரப்பின் எறிசுறா நீக்கி,
வலம்புரி மூழ்கிய வான்திமிற் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,
கலிகெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்
குவவுமணல் நெடுங்கோட்டு ஆங்கண்,
உவக்காண் தோன்றும், எம் சிறுநல் ஊரே! 
 

எது பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. -
சேந்தன் கண்ணனார்.
 

 
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி,
பெறல்அருங் கேளிர் பின்வந்து விடுப்ப,
பொருள்அகப் படுத்த புகல்மலி நெஞ்சமொடு
குறைவினை முடித்த நிறைவுஇன் இயக்கம் -
அறிவுறூஉம் கொல்லோ தானே - கதிர்தெற,
கழல்இலை உகுத்த கால்பொரு தாழ்சினை,
அழல்அகைந் தன்ன அம்குழைப் பொதும்பில்,