|
றூஉம் கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. என்பது மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின் சென்று, நவ்விப் பினைக்கண்டு, சொல்லியது. - கயமனார். ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின், பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும், அரிய அல்ல-மன்-இகுளை!-'பெரிய கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் கழை நரல் சிலம்பின் ஆங்கண், வழையோடு வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில், படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு, எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது, மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல, துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ, நெறிகெட விலங்கிய, நீயிர், இச் சுரம், அறிதலும் அறிதிரோ? என்னுநர்ப் பெறினே.
என்பது தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார்.
கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின், வில்லோர் தூணி வீங்கப் பெய்த அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை, செப்பு அடர் அன்ன செங்குழை அகம்தோறு, இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு, ஆலி வானின் காலொடு பாறி, துப்பின் அன்ன செங் கோட்டு இயவின், நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்- கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி, நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும் குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து, ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின் எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண் ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ, பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி, கன்று புகு மாலை நின்றோள் எய்தி, கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி, பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி, தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ- நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல், அம் தீம் கிளவிக் குறுமகள் மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே?
என்பது வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச்
சொல்லியது. - கல்லாடனார்
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய, மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த, முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை, புள் இறை கூரும் மெல்லம் புலம்ப!- நெய்தல் உண்கண் பைதல கலுழ, பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும் அரிது உற்றனையால்
-பெsரும! உரிதினின் கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும்-கொண்ட
|