|
வேள்வியின், விழுமிது நிகழ்வது ஆயினும் - தெற்கு ஏர்பு, கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து, சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின், நோய் இன்றாக செய் பொருள்! வயிற்பட மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை, கவவு இன்புறாமைக் கழிக-வள வயல், அழல் நுதி அன்ன தோகை ஈன்ற கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல் நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர, புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை, இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த வெண் குருகு நரல, வீசும் நுண் பல் துவலைய தண் பனி நாளே!
என்பது பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி
செலவழுங்குவித்தது; - பெருந்தலைச் சாத்தனார்
'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி, காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ, திரி மருப்பு இரலை புல் அருந்து உகள, முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர் குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர, பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற, கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் மாலையும் உள்ளார்ஆயின், காலை யாங்கு ஆகுவம் கொல்? பாண!' என்ற மனையோள் சொல் எதிர் சொல்லல்செல்லேன், செவ்வழி நல் யாழ் இசையினென், பையென, கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து, அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே- விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக, கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக் கார் மழை முழக்கு இசை கடுக்கும், முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே.
என்பது பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. -ஒக்கூர்
மாசாத்தனார்
எம் வெங் காமம் இயைவது ஆயின், மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர் கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித் தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின் செறிந்த சேரிச் செம்மல் மூதூர், அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல- தோழிமாரும் யானும் புலம்ப, சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச் செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி, அத்த இருப்பை ஆர் கழல் புதுப்பூத் துய்த்த வாய, துகள் நிலம் பரக்க, கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி, வன் கை எண்கின் வய நிரை பரக்கும் இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு, குன்ற வேயின் திரண்ட என் மென் தோள் அஞ்ஞை சென்ற-ஆறே!
என்பது மகட்போக்கிய தாய்சொல்லியது. - மாமூலனார்
நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும், மாசு இல் அங்கை, மணி மருள் அவ்
|