|
எடுத்த, தட மென் தோளே. என்பது தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. - கபிலர் அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி வருந்தினை-வாழி, என் நெஞ்சே!-பருந்து இருந்து உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை, உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம், எம்மொடு இறத்தலும் செல்லாய்; பின் நின்று, ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது, செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே மறவல் ஓம்புமதி, எம்மே-நறவின் சேயிதழ் அனைய ஆகி, குவளை மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை, உள்ளகம் கலை உள்ளுதொறு உலறி, பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல் வெய்ய உகுதர, வெரீஇ, பையென, சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை பூ வீ கொடியின் புல்லெனப் போகி, அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக, இயங்காது வதிந்த நம் காதலி உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!
என்பது நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன்,
தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. -
பொருந்தில்
இளங்கீரனார்
பெருநீர் அழுவத்து எந்தை தந்த கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி, எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ, செக்கர் ஞெண்டின்
குண்டு அளை கெண்டி, ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி, கொண்டல் இடு மணல் குரவை முனையின் வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி, மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப் பல் பூங் கானல் அல்கினம் வருதல் கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர், கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை கடி கொண்டனளே-தோழி!-'பெருந்துறை, எல்லையும் இரவும் என்னாது, கல்லென வலவன் ஆய்ந்த வண் பரி நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே.
என்பது பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி
தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது. -
உலோச்சனார்
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத் துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல், அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத் தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள், மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச் செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய், வினை நயந்து அமைந்தனை ஆயின், மனை நகப் பல்வேறு வெறுக்கை தருகம்-வல்லே, எழு இனி, வாழி, என் நெஞ்சே!-புரி இணர் மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன் கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி, மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல், சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும், என்றூழ் நின்ற புன் தலை வைப்பில், பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை இருங்கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட, மென் புனிற்று அம் பிணவு பசித்தென,
|