|
கரந்த வாடை வைகறை, விசும்பு உரிவது போல், வியல் இடத்து ஒழுகி, மங்குல் மா மழை, தென் புலம் படரும் பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி, தம் ஊரோளே, நன்னுதல்; யாமே, கடிமதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து, நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு, சிறு கண் யானை நெடு நா ஒண் மணி, கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு, தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து, கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள், இரவுத் துயில் மடிந்த தானை, உரவுச் சின வேந்தன் பாசறையேமே.
என்பது தலைமகன் பருவங் கண்டு சொல்லியது. வினைமுற்றும்
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - ஆவூர்
மூலங்கிழார்
"நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய், அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத் தண் கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப் பைந் தாது அணிந்த போது மலி எக்கர், வதுவை நாற்றம் புதுவது கஞல, மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில் படு நா விளி யானடுநின்று, அல்கலும் உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ, இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண், சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர் பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன, இகழுநர் இகழா இள நாள் அமையம் செய்தோர் மன்ற குறி" என, நீ நின் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, வாராமையின் புலந்த நெஞ்சமொடு, நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!’ என, மெல்லிய இனிய கூறி, வல்லே வருவர் வாழி-தோழி!-பொருநர் செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப் பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன், இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவிய காடு இறந்தோரே.
என்பது பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்
கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற, மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர் பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும் அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப் புலத்தல் கூடுமோ-தோழி! அல்கல் பெருங் கதவு பொருத யானை மருப்பின் இரும்பு செய் தொடியின் ஏர ஆகி, ‘மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி முயங்கல் விடாஅல் இவை’ என மயங்கி, 'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம் மற்று இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ, திதலை அணிந்த தேம் கொள் மென் முலை நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் வீங்க முயங்கல் யாம் வேண்டினமே; தீம்பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக் கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச் செவிலி
|