அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   329
Zoom In NormalZoom Out


 

கை என் புதல்வனை நோக்கி,
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ
செல்வற்கு ஒத்தனம், யாம்' என, மெல்ல என்
மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு,
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய்,
சிறு புறம் கவையினனாக, உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய்
மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே?
 

என்பது   தலைமகன்  தோழியை  வாயில்  வேண்டி, அவளால்  தான்
வாயில் பெறாது, ஆற்றாமையே  வாயிலாகப்  புக்கு,  கூடிய தலைமகன்
நீக்த்துக்கண் புக்க  தோழிக்குத்  தலைமகள் சொல்லியது. - பாண்டியன்
கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
 

"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம் அழ,
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார்,
செல்ப" என்ப' என்போய்! நல்ல
மடவை மன்ற நீயே; வடவயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை,
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே-தேம் படத்
தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப்
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட,
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்
குருதியொடு துயல்வந்தன்ன நின்
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?
 

என்பது  செலவு  உணர்ந்து   வேறுபட்ட   தலைமகட்குத்    தோழி
சொல்லியது. - மதுரை கணக்காயனார்
 

மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும், உரைப்பல்-தோழி!
கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே
அருவி ஆன்ற பைங் கால் தோறும்
இருவி தோன்றின பலவே. நீயே,
முருகு முரண் கொள்ளும் தேம் பாய் கண்ணி,
பரியல் நாயொடு பல் மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின்
பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து,
கிள்ளைத் தெள் விளி இடைஇடை பயிற்றி,
ஆங்கு ஆங்கு ஒழுகாய் ஆயின், அன்னை,
'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என,
பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்,
உறற்கு அரிது ஆகும், அவள் மலர்ந்த மார்பே.

என்பது தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. - பாண்டியன் அறிவுடைநம்பி 

"தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள்,
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும், இடம் படின்
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம் தலைத்தலைச் சிறப்ப,
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று
இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின்
மாவின் நறு வடி போல, காண்தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்,
வாழலென் யான்" எனத்