|
தேற்றி, பல் மாண் தாழக் கூறிய தகைசால் நல் மொழி மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின் எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க வினவல் ஆனாப் புனையிழை!-கேள் இனி- வெம்மை தண்டா எரி உகு பறந்தலை, கொம்மை வாடிய இயவுள் யானை நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி, அறுநீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும் உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை, எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை, மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே!
என்பது வினை முற்றி மீண்ட தலைமகன், 'எம்மையும் நினைத்தறிதிரோ?
' என்ற தலைமகட்குச் சொல்லியது. - வெள்ளாடியனார்
நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ்வலை, கடல் பாடு அழிய, இன மீன் முகந்து, துணை புணர் உவகையர் பரத மாக்கள் இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி, உப்பு ஒய் உமணர் அருந் துறை போக்கும் ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ, அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி, பெருங் களம் தொகுத்த உழவர் போல, இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி, பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி, கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ! பெருமை என்பது கெடுமோ-ஒரு நாள் மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் தண் நறுங் கானல் வந்து, 'நும் வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே?
என்பது பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - முடங்கிக்
கிடந்த நெடுஞ்சேரலாதன்.
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி, 'நிலம் புடை பெயர்வது அன்றுகொல், இன்று?' என, மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து, இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு, கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட, நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும், கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி, 'சென்றார்' என்பு இலர்-தோழி!-வென்றியொடு வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத் தமிழ் கெழு மூவர் காக்கும் மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே.
என்பது 'பிரிவிடை ஆற்றாளாயினாள்' என்று பிறர் சொல்லக் கேட்டு,
வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்.
நெருநல் எல்லை ஏனல் தோன்றி, திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து, புரவலன் போலும் தோற்றம் உறழ்
|