அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   331
Zoom In NormalZoom Out


 
கொள,
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண்
குளிர்கொள் தட்டை மதன் இல புடையா,
'சூரர மகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என்
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்
கடிய கூறி, கை பிணி விடாஅ,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின்
சொல்ல வல்லிற்றும் இலனே; அல்லாந்து,
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை-தோழி! நாம் சென்மோ.
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று,
என் குறைப் புறனிலை முயலும்
அண்கணாளனை நகுகம், யாமே.
 
 

என்பது  பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக்
குறை  நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம். -
நல்வெள்ளியார்.
 

  
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய,
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை,
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும்
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள்
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண்
தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய்
வெம் பரல் அதர குன்று பல நீந்தி,
யாமே எமியம் ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனை ஆயின்-முனாஅது
வெல் போர் வானவன் சொல்லி மீமிசை,
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள்,
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின்
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல,
அன்று நம் அறியாய் ஆயினும், இன்று நம்
செய்வினை ஆற்றுற விலங்கின்,
எய்துவை அல்லையோ, பிறர் நகு பொருளே?
 
 
என்பது  தலைமகன்  இடைச்சுரத்துத்  தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்.