அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   334
Zoom In NormalZoom Out


 

வன்புறை  எதிர்   அழிந்து   சொல்லியது;   பிரிவுணர்த்திய  தோழி
சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார்
 

  
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்,
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்,
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல்
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி,
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன்.
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி,
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை
மடக் கிளி எடுத்தல் செல்லாத் தடக் குரல்
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து
பைதலன் பெயரலன் கொல்லோ? ஐ தேய்கு-
'அய வெள் அருவி சூடிய உயர் வரைக்
கூஉம் கணஃது எம் ஊர்' என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே.
 
 

என்பது தோழி தலைமகன்   குறை  கூறியது.  பகலே  சிறைப்புறமாக,
தோழி   தலைமகட்குச்    சொல்லுவாளாய்,    தலைமகன்   கேட்பச்
சொல்லியதூஉம்  ஆம்;  தோழி  குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம்
ஆம்.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்.
 

 
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து,
உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின்’
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின்
ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின்,
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு,
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென,
கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி,
அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப்
பரந்து படு பாயல் நவ்வி பட்டென,
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு,
நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு,
'இன்னகை'! இனையம் ஆகவும், எம்வயின்
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின்