|
கிளைஇய, நுண் பல் தித்தி, மாஅயோளே?
என்பது தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்துக் கிழத்தியை
நினைந்து சொல்லியது. - சேரமான் நத்தையார்
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக் கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச் செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண், தளிர் ஏர் மேனி, மாஅயோயே! நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச, கோடை நீடிய பைது அறு காலை, குன்று கண்டன்ன கோட்ட, யாவையும் சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல் என்றூழ் வியன்குளம் நிறைய வீசி, பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை, பல்லோர் உவந்த உவகை எல்லாம் என்னுள் பெய்தந்தற்றே-சேண் இடை ஓங்கித் தோன்றும் உயர் வரை வான் தோய் வெற்பன் வந்தமாறே!
என்பது தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச்
சொல்லியது.- கபிலர்
கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி, என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய, நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி, குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய், தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே கொய் அகை முல்லை காலொடு மயங்கி, மை இருங் கானம் நாறும் நறு நுதல், பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும் அளியரோ அளியர்தாமே-அளி இன்று ஏதில் பொருட்பிணிப் போகி, தம் இன் துணைப் பிரியும் மடமையோரே!
என்பது தலைமகன் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
- மதுரையாசிரியர் நல்லந்துவனார்
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும் தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே; முரண் செறிந்திருந்த தானை இரண்டும் ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர் முன்
இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது, ஊர்க, பாக! ஒரு
|