| அறியாய், வாழி தோழி! இருள் அற விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக் கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய, நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய், நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு கள்ளி அம் காட்ட கடத்திடை உழிஞ்சில் உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின், விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும் அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும், 'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் பொருளே காதலர் காதல்; 'அருளே காதலர்' என்றி, நீயே! |
| |
|
என்பது வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச்
சாத்தனார் |
| | |
| விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப, வேந்தனும் வெம்பகை தணிந்தனன்; தீம் பெயற் காரும் ஆர்கலி தலையின்று. தேரும் ஓவத்தன்ன கோபச் செந் நிலம், வள் வாய் ஆழி உள் உறுபு உருள, கடவுக; காண்குவம்-பாக! மதவு நடைத் தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய, கனை அல்ஆம் குரல காற் பரி பயிற்றி, படு மணி மிடற்ற பய நிரை ஆயம் கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர் கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க, மனைமனைப் படரும் நனை நகு மாலை, தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப் புன் காழ் நெல்லிப் பைங் காய் தின்றவர் நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி, 'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்! பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி, வருகுவை ஆயின், தருகுவென் பால்' என, விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி, திதலை அல்குல் எம் காதலி புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே. |
| |
|
என்பது வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச்
சொல்லியது.- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார். |
| | |
| காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின், ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை, உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின், விளி முறை அறியா வேய் கரி |
|  |