| கானம், வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து யாம் ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ, வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு கண்படை பெறேன், கனவ-ஒண் படைக் கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் பொருது புண் நாணிய சேரலாதன் அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென, இன்னா இன் உரை கேட்ட சான்றோர் அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர், பெரும்பிறிது ஆகியாங்கு, பிரிந்து இவண் காதல் வேண்டி, எற் துறந்து போதல்செல்லா என் உயிரொடு புலந்தே. |
| |
|
என்பது புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும்
அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார் |
| | |
| நகை ஆகின்றே-தோழி! நெருநல்- மணி கண்டன்ன துணி கயம் துளங்க, இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை, ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப, மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும் தண் துறை ஊரன் திண் தார் அகலம் வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய, பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு, எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று, 'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற என்னும் தன்னும் நோக்கி, மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே. |
| |
|
என்பது பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு
வந்தானாக, தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை
வாணிகன் இளவேட்டனார் |
| | |
| சிறு பைந் தூவிச் செங் காற் பேடை நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி, வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி |
|  |