அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   344
Zoom In NormalZoom Out


 
தண் பரங்குன்றத்து,
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,
இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த
தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம்
தாம் பாராட்டிய காலையும் உள்ளார்,
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.
 
 

என்பது  தலைமகன்  பிரிவின்கண்  வேறுபட்ட  கிழத்திக்குத்  தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகன்
 

  
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க,
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து,
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய;
'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக்
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியினும் செறிய
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே.
 
 

என்பது  தலைமகற்குத்  தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. -
குடவாயிற் கீரத்தனார்
 

  
நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத்
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர்-
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து
ஆழல் வாழி, தோழி!-தாழாது,
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால்
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு,
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும்
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும்,
பழகுவர்