அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   345
Zoom In NormalZoom Out


 
ஆதலோ அரிதே-முனாஅது
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.
 
 

என்பது  தலைமகன்  பொருள்வயிற்  பிரிய, வேறுபட்ட தலைமகட்குத்
தோழி சொல்லியது. - மாமூலனார்
 

  
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்,
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள்,
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப,
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்,
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல,
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
ஆகம் அடைதந்தோளே-வென் வேற்
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின்,
மடவது மாண்ட மாஅயோளே.
 
 

என்பது அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
பரணர்
 

  
கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி,
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல்-
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப,
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,
கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து,
மன்று நிறை பைதல் கூர, பல உடன்
கறவை தந்த கடுங் கால் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ,
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை,
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண்
சேக் கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள்கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே.
 
 

என்பது