|
தலைமகள் புணர்ந்துடன் செல்ல,
செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.
- கருவூர்க் கண்ணம்புல்லனார் |
| | |
| களையும் இடனால்-பாக! உளை அணி உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய, தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி, ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக, செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல கடுநீர் வரித்த செந் நிலமருங்கின், விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர, பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ, ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன், கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை புலம்பு கொள் மாலை கேட்டொறும் கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. |
| |
|
என்பது வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
- ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் |
| | |
| உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம் ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்! நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல உவ இனி-வாழி, தோழி! அவரே, பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச் செலவு அயர்ந்தனரால் இன்றே-மலைதொறும் மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி, மீன்கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை உயவல் யானை வெரிநுச் சென்றன்ன, கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி, காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம், 'பணைத் தோள், நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை, நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு அரியவால்' என அழுங்கிய செலவே! |
| |
|
என்பது வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு
வலித்தமை தோழி சொல்லியது. |
|  |