| தேரொடு நிலம் படு மின்மினி போல, பல உடன் இலங்கு பரல் இமைக்கும்' என்ப-நம் நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே! |
| |
|
என்பது பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - நோய்பாடியார் |
| | |
| 'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத் தண் அயத்து அமன்ற கூதளம் குழைய, இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம் கேட்டியோ வாழி!, வேண்டு அன்னை! நம் படப்பை ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என, முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே; பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள், அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் வருவர் ஆயின், 'பருவம் இது' எனச் சுடர்ந்து இலங்கு எல்வளை நெகிழ்ந்த நம்வயின் படர்ந்த உள்ளம் பழுது அன்றாக, வந்தனர் - வாழி, தோழி!-அந்தரத்து இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப, கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம் புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன் வெண் கோட்டு யானை விளி படத் துழவும் அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே. |
| |
|
என்பது தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி தலைமகட்குச்
சொல்லியது. - ஊட்டியார் |
| | |
| ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த் தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல வண்ணம் வாடிய வரியும், நோக்கி, ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின் ஈதல் இன்பம் வெஃகி, மேவரச் செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப் பராரை நெல்லி அம் புளித் திரள் காய் கான மட மரைக் கணநிரை கவரும் வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று, விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம் நீடலர்-வாழி, தோழி!-ஆடு இயல் மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம் சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண் அம்புடைக் கையர் அரண் பல நூறி, நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன் சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத் தலை நாள் அலரின் |
|  |