| நாறும் நின் அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே. |
| |
|
என்பது 'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற
தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.-
உமட்டூர் கிழார் |
| | |
| கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென, இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக் குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி, கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற, பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே; இனியே வதுவை கூடிய பின்றை, புதுவது பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப் பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும் வென் வேற் கவுரியர் தொல் முது கோடி முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை, வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த பல் வீழ் ஆலம் போல, ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. |
| |
|
என்பது தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச்
சொல்லியது.- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன்மள்ளனார் |
| | |
| நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் பயன் இன்மையின் பற்றுவிட்டு, ஒரூஉம் நயன் இல் மாக்கள் போல, வண்டினம் சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர, மை இல் மான் இனம் மருள, பையென வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப, ஐயறிவு அகற்றும் கையறு படரோடு அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன, பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை, காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக, ஆர் அஞர் உறுநர் அருநிறம் சுட்டிக் கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது, எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி, மதுகை மாய்தல் வேண்டும்-பெரிது அழிந்து, இது கொல்-வாழி, தோழி! என் உயிர் விலங்கு வெங் கடு வளி எடுப்பத் துளங்கு மரப் புள் |
|  |