|
ளின் துறக்கும் பொழுதே?
என்பது பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத்
தோழி சொல்லியது - அந்தியிளங்கீரனார்
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம் துளி தலைக்கொண்ட நளிபெயல் நடுநாள், மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் பொன் எறி பிதிரின் சுடர வாங்கி, குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண், ஆறே அரு மரபினவே; யாறே சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய; கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க, 'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து, ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன், ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய, இருங் களிறு அட்ட பெருஞ்சின உழுவை நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை, உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி, அருள்புரி நெஞ்சமொடு எஃகு துணையாக வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின் ஆனா அரும் படர் செய்த யானே, தோழி! தவறு உடையேனே.
என்பது தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.-
எருமை வெளியனார் மகனார் கடலனார்.
பின்னொடு முடித்த மண்ணா முச்சி நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ; வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு ஒரு காழ்
முத்தம் இடை முலை விளங்க, வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய், நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர 'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என, என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி இருவேம் நம் படர் தீர வருவது காணிய வம்மோ - காதல் அம் தோழி! கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின், ஏனல் அம் சிறு தினைச் சேணோன் கையதைப் பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி விடு பொறிச் சுடரின் மின்னி, அவர் சென்ற தேஎத்து நின்றதால், மழையே.
என்பது தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான்; குறித்த பருவ வரவு
கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி |