| | வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து, போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த, தண் பெயல் பொழிந்த பைதுறு காலை, குருதி உருவின் ஒண் செம் மூதாய் பெரு வழி மருங்கில் சிறுபல வரிப்ப, பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ வெண் களர் அரிமணல் நன் பல தாஅய், வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில், கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து "திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ, இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என, வன்புறை இன்சொல் நன் பல பயிற்றும் நின் வலித்து அமைகுவென் மன்னோ-அல்கல் புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற் கல்லாக் கோவலர் ஊதும் வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே! |
| ‘அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர் பொருள்’ என வலித்த பொருள் அல் காட்சியின் மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது, எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல் கரி குதிர் மரத்த கான வாழ்க்கை, அடு புலி முன்பின், தொடு கழல் மறவர் தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும் அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த கல் நெறிப் படர்குவர்ஆயின்-நல் நுதல், செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய், அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர் ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து, ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும் இரங்குநர் அல்லது, பெயர் தந்து, யாவரும் தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?' என- மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்; பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்; மெல் இயல் குறுமகள்!-புலந்து பல கூறி ஆனா நோயை ஆக, யானே பிரியச் சூழ்தலும் உண்டோ, அரிது பெறு இறப்பின் நின்வயினானே?' |