| னார் மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க, தண் துறை ஊரன் எம் சேரி வந்தென இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை அவை புகு பொருநர் பறையின், ஆனாது, கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில், கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன், வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல், சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ?, என, ஆதி மந்தி பேதுற்று இனைய, சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும், அம் தண் காவிரி போல, கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே. |
| |
|
என்பது 'தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்' என்று கழறக் கேட்ட
பரத்தை, தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பரணர் |
| | |
| 'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர், துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப் பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச் சூழ்ந்திசின்-வாழிய, நெஞ்சே!-வெய்துற இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும் குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ், கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார், பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின், உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர, செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும் கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப் புல் அரை இத்திப் புகர் படு நீழல் எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை, வானவன் மறவன், வணங்கு வில் தடக் கை, ஆனா நறவின்வண் மகிழ், பிட்டன் பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த திருந்துஇலை எஃகம் போல, அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே. |
| |
|
என்பது தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.- மருதன் இள நாகனார். |
| | |
| 'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின், வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து, பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல் இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ, கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல், தேம் பிழி நறவின் குறவர் முன்றில், முந்தூழ் ஆய் மலர் |
|  |