| உதிர, காந்தள் நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென வாடை தூக்கும் வருபனி அற்சிரம், நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர் என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என, எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும், உள்ளியும் அறிதிரோ-ஓங்குமலைநாட! உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு, தடந்தாள்ஆம்பல் மலரொடு கூட்டி யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது, ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி, ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய, கடும் பரிப் புரவிக் கை வண் பாரி தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த தேம் கமழ் புது மலர் நாறும்-இவள் நுதலே? |
| |
|
என்பது களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி
சொல்லியது.- மதுரை நக்கீரனார் |
| | |
| தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர் கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து, கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில், பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய வன் புலம் துமியப் போகி, கொங்கர் படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள் அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப, 'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர வருந்தினை-வாழி, என் நெஞ்சே!-இருஞ் சிறை வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை, ஆடு தொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக் கொடு வில் எயினர் கோட் சுரம் படர, நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை, கல் பிறங்கு அத்தம் போகி, நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே. |
| |
|
இது பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார். |
| | |
| கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, |
|  |