| எஞ்சாது உரை' என, இன் நகை இருக்கை, பின் யான் வினவலின், செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல் வர, அகம் மலி உவகையள் ஆகி, முகன் இகுத்து, ஒய்யென இறைஞ்சியோளே-மாவின் மடம் கொள் மதைஇய நோக்கின், ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே. |
| |
|
என்பது வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது.
தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது
சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர் கிழார். |
| | |
| தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம், கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும் படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை, நல்கூர் சீறூர் எல்லித் தங்கி, குடுமி நெற்றி நெடு மரச் சேவல் தலைக் குரல் விடியற் போகி, முனாஅது, கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி, அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென, குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம், நனி நீடு உழந்தனைமன்னே! - அதனால் உவ இனி-வாழிய, நெஞ்சே! மை அற வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச் சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி, தாழ் இருங் கூந்தல் நம் காதலி நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே. |
| |
|
என்பது வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரைப் பேராலவாயார். |
| | |
| முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும் புருவைப் பன்றி வரு திறம் நோக்கி, கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம் |
|  |