அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   359
Zoom In NormalZoom Out


 
செறித்தமை அறியாய்; பல் நாள்
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின்,
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின்,
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர்,
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்,
கருங் கட் கோசர் நியமம் ஆயினும்,
'உறும்' எனக் கொள்குநர்அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே.
 
 

பகற்குறி  வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு
நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை மருதன் இளநாகனார்
 

  
விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறு
வளம்கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெருவரை மருங்கில்
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
பாசி தின்ற பைங் கண் யானை
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
வேய் கண் உடைந்த வெயில் அவிர், நனந்தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும் பேர் அன்பினர்-தோழி!-இருங் கேழ்
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
பசி என அறியாப் பணை பயில் இருக்கை,
தட மருப்பு எருமை தாமரை முனையின்,
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்,
குடநாடு பெறினும் தவிரலர்-
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.
 
 

என்பது  பிரிவிடை  மெலிந்த  தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -
மாமூலனார்
 

  
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி,
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச்
செங் கண் இரும் புலி குழுமும் சாரல்
வாரல்-வாழியர், ஐய! - நேர் இறை
நெடு மென் பணைத் தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே; நாளை
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்,
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை,
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி