|
யின் தூங்கல் வேண்டின், என் ஆம்கொல்லோ?-தோழி!-மயங்கிய மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக ஆடிய பின்னும், வாடிய மேனி பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று, அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி, வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே, 'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக் கான் கெழு நாடன் கேட்பின், யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச்
சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -
வெறிபாடிய காமக்கண்ணியார்
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில் மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை அதிரல் பரந்த அம் தண் பாதிரி உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ மராஅ மலரொடு விராஅய், பராஅம் அணங்குடை நகரின் மணந்த பூவின் நன்றே, கானம்; நயவரும் அம்ம; கண்டிசின் வாழியோ-குறுமகள்!-நுந்தை அடு களம் பாய்ந்த தொடிசிதை மருப்பின், பிடி மிடை, களிற்றின் தோன்றும் குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே!
இது உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.-
பாலை பாடிய பெருங்கடுங்கோ
அரையுற்று அமைந்த ஆரம் நீவி, புரையப் பூண்ட கோதை மார்பினை, நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து, எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே. பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை, ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான், பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப் புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை வம்ப நாரை இனன் ஒலித்தன்ன அம்பல் வாய்த்த தெய்ய-தண் புலர் வைகுறு விடியல் போகிய எருமை நெய்தல் அம் புது மலர் மாந்தும் கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே!
என்பது துறை தோழி வரை |