| வு கடாயது. - உலோச்சனார் அம்ம வாழி!, தோழி! 'இம்மை நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும் தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்? தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர் வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல் தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி, நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து அடி புதை தொடுதோல் பறைய ஏகி, கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு, அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல, பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை, புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர், தண் கார் ஆலியின், தாவன உதிரும் பனி படு பல் மலை இறந்தோர்க்கு முனிதகு பண்பு யாம் செய்தன்றோ இலமே! |
| | உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக் கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென; உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா, ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி பெருவரை மருங்கில் குறிஞ்சி பாட; குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது, படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்; ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப, தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன், காவலர் அறிதல் ஓம்பி, பையென வீழாக் கதவம் அசையினன் புகுதந்து, உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து, இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன்-தோழி; - இன்று எவன்கொல்லோ கண்டிகும்-மற்று அவன் நல்காமையின் அம்பல் ஆகி, ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் இருஞ் சூழ் ஓதி ஒண் |