அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   371
Zoom In NormalZoom Out


 

தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகனை ஆற்றுவித்தது.- பாலை
பாடிய பெருங்கடுங்கோ.
 

 
கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி
சிதலை செய்த செந் நிலைப் புற்றின்
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி,
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல்
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய்,
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே;
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்;
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை;
கழியக் காதலர்ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;
வரையின் எவனோ?-வான் தோய் வெற்ப!-
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார்,
தொன்று இயல் மரபின் மன்றல் அயர,
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி,
நொதுமல் விருந்தினம் போல, இவள்
புதுநாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே.
 

இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி,
வரைவு கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர் கிழார்.
 

 
நன்று அல் காலையும் நட்பின் கோடார்,
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்,
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன்
மாவீசு வண்மகிழ் அஃதை போற்றி,
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர்
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து,
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற,
நல்காது துறந்த காதலர், 'என்றும்
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர்
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில்
குவை இமில் விடையவேற்று ஆ ஒய்யும்
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல்
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர்,
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர்