|
என்பது பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்
|
| எரி அகைந்தன்ன தாமரை இடை இடை அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர் கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின், ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர! பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப் புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல், நறு மலர்க்கு அணவரும் குறும் பல் கூந்தல், மாழை நோக்கின், காழ் இயல் வன முலை, எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே, பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து அலர் ஆகின்றால் தானே; மலர்தார், மை அணி யானை, மறப் போர்ச் செழியன் பொய்யா விழவின் கூடற் பறந்தலை, உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி, இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர் ஓடுபுறம் கண்ட ஞான்றை, ஆடுகொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே. |
|
என்பது தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர்.
|
| மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும், அவ்வரி அல்குல் ஆயமும், உள்ளாள், ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி, வெருவரு கவலை ஆங்கண், அருள்வர, கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப் பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண், பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச் சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே - சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து; யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள், தன் ஓரன்ன தகைவெங் காதலன் வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட, சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்- நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண்பழம் கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும் பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர், வாணன் சிறுகுடி வடாஅது தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே? |
|
இது மகட் போக்கிய செவி
|
|  |