அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   374
Zoom In NormalZoom Out


 

லித்தாய் சொல்லியது.
 

 
கறங்குவெள் அருவி பிறங்குமலைக் கவாஅன்,
தேம்கமழ் இணர வேங்கை சூடி,
தொண்டகப் பறைச்சீர் பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
இயல்முருகு ஒப்பினை, வயநாய் பிற்பட,
பகல்வரின், கவ்வை அஞ்சுதும்; இகல்கொள,
இரும்பிடி கன்றொடு விரைஇய கயவாய்ப்
பெருங்கை யானைக் கோள்பிழைத்து, இரீஇய
அடுபுலி வழங்கும் ஆர்இருள் நடுநாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்.
என்ஆ குவள்கொல் தானே? பல்நாள்
புணர்குறி செய்த புலர்குரல் ஏனல்
கிளிகடி பாடலும் ஒழிந்தனள்;
அளியள் தான்நின் அளிஅலது இலளே! 
 

என்பது  செறிப்பு  அறிவுறீஇ, 'இரவும்  பகலும் வாரல்' என்று வரைவு
கடாஅயது.- கபிலர்
 

 
‘நுதலும் தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும், வாட
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர்-வறிது,
ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை,
ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப,
நெறிஅயல் திரங்கும் அத்தம், வெறிகொள,
உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில்
நோன்சிலை மழவர் ஊன்புழுக்கு அயரும்
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து,
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை,
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை,
மடை அமை திண்சுரை, மாக்காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப,
துணிகுவர் கொல்லோ தாமே-துணிகொள
மறப்புலி உழந்த வசிபடு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி,
படிமுழம் ஊன்றிய நெடுநல் யானை
கைதோய்த்து உயிர்க்கும் வறுஞ்சுனை,
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே?
 

செலவு   உணர்த்திய   தோழிக்குத்  தலைமகள்  சொற்றது;  தோழி
தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார்
 

 
நெடுவேள் மார்பின் ஆரம் போல,
செவ்வாய் வானம் தீண்டி, மீன்அருந்தும்
பைங்காற் கொக்கினம் நிரைபறை உகப்ப,
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின்
கல்சேர்ந் தன்றே, பல்கதிர் ஞாயிறு -
மதர் எழில் மழைக்கண் கலுழ, இவளே
பெரு நாண் அணிந்த சிறுமென் சாயல்
மாண்நலம் சிதைய ஏங்கி, ஆனாது,
அழல்