அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   375
Zoom In NormalZoom Out


 
தொடங்கினளே-பெரும!-அதனால்
கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி
நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந்து, அசைஇ,
வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது,
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்,
சிறுகுரல் நெய்தல்எம் பெருங்கழி நாட்டே.
 

தோழி பகற்குறிக்கண் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை
எதிர்ப்பட்டு  நின்று  சொல்லியது. -  நக்கீரனார்  களிற்றியானை நிரை
முற்றும்
 

 
நாம்நகை உடையம் நெஞ்சே!-கடுந்தெறல்
வேனில் நீடிய வான்உயர் வழிநாள்,
வறுமை கூரிய மண்நீர்ச் சிறுகுளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணி,
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக்களிறு
செங்கோல் வால் இணர் தயங்கத் தீண்டி,
சொரிபுறம் உரிஞிய நெறிஅயல் மரா அத்து
அல்குறு வரிநிழல் அசைஇ, நம்மொடு
தான்வரும் என்ப, தடமென் தோளி-
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறுசெல் மாக்கள் சோறு பொதி வெண்குடை
கனைவிசைக் கடுவளி எடுத்தலின், துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்,
கருமுக முசுவின் கானத் தானே. 
 

என்பது தோழியால் தலைமகள் உடன்வரும் எனக் கேட்ட தலைமகன்
நெஞ்சிற்குச் சொல்லியது.
 

 
இரும்பிழி மகாஅர்இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
வல்உரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்;
பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்,
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வைஎயிற்று
வலம்சுரித் தோகை ஞாளி மகிழும்;
அரவாய் ஞமலி மகிழாது மடியின்,
பகல்உரு உறழ நிலவுக்கான்று விசும்பின்
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
திங்கள் கல்சேர்பு கனை இருள் மடியின்
இல் எலி வல்சி வல்வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல் வாளாது மடியின்,