அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   376
Zoom In NormalZoom Out


 

மனைச் செறி கோழி மாண்குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்த காலை, ஒருநாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து,
ஆதி போகிய பாய்பரி நன்மா
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல்முதிர் புறங்காட்டு அன்ன
பல்முட் டின்றால் தோழி! நம்களவே. 

என்பது  தலைமகன்  சிறைப்புறத்தானாக,  தோழிக்குச் சொல்லுவாளாய்,
தலைமகள் சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம்
ஆம். - பரணர்

உண்ணா மையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல,
வரைசெறி சிறுநெறி நிரைபுடன் செல்லும்
கான யானை கவின்அழி குன்றம்
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த
சில்ஐங் கூந்தல் நல்அகம் பொருந்தி
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு
உடைமதி-வாழிய, நெஞ்சே!-நிலவுஎன
நெய்கனி நெடுவேல் எஃகின் இமைக்கும்
மழைமருள் பல்தோல் மாவண் சோழர்
கழைமாய் காவிரிக் கடல்மண்டு பெருந்துறை,
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கடல் ஓதம் போல,
ஒன்றில் கொள்ளாய், சென்றுதரு பொருட்கே. 

என்பது தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.

'நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
வந்துதிறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து
சென்றீக' என்பஆயின், வேந்தனும்
நிலம்வகுந் துறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது; நன்றே.
மாட மாண்நகர்ப் பாடுஅமை சேக்கைத்
துனிதீர் கொள்கைநம் காதலி இனிதுற,
பாசறை வருத்தம் வீட, நீயும்-
மின்னு நிமிர்ந்தன்ன பொன்இயற் புனைபடை,
கொய்சுவல், புரவி, கைகவர் வயங்குபரி,
வண்பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லை
வீகமழ் நெடுவழி ஊதுவண்டு இரிய,
காலை எய்த, கடவுமதி-மாலை
அந்திக் கோவலர் அம்பணை இமிழ்இசை
அரமிய வியலகத்து இயம்பும்
நிரைநிலை ஞாயில் நெடுமதில் ஊரே. 

தலைமகன்  தேர்ப்பாகற்கு  உரைத்தது. -  மதுரை அறுவை வாணிகன்
இளவேட்டனார்

அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ,
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி-
இரங்காழ் அன்ன அரும்புமுதிர் ஈங்கை
ஆலி அன்ன வால்வீ தாஅய்,
வைவால் ஓதி மைஅணல் ஏய்ப்பத்
தாதுஉறு குவளைப் போதுபிணி அவிழ,
படாஅப் பைங்கண் பாஅடிக் கயவாய்க்
கடாஅம் மாறிய யானை போல,
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ
மைதோய் விசும்பின்