அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   377
Zoom In NormalZoom Out


 
மாதிரத்து உழிதர,
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
முனிய அலைத்தி, முரண்இல் காலை;
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்வினை மருங்கின் சென்றோர் வல்வரின் -
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத்து இறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடுபெற
ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த
பீடுஇல் மன்னர் போல,
ஓடுவை மன்னால்-வாடை! நீ-எமக்கே. 
 

என்பது   தலைமகன்   வினைமுற்றி  மீண்டமை  உணர்ந்த  தோழி
தலைமகட்குச் சொல்லியது.
 

 
நின்வாய் செத்து நீபல உள்ளி,
பெரும்புன் பைதலை வருந்தல் அன்றியும்,
மலைமிசைத் தொடுத்த மலிந்துசெலல் நீத்தம்
தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
அறல்வார் நெடுங்கயத்து அருநிலை கலங்க,
மால்இருள் நடுநாட் போகி, தன்ஐயர்
காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு,
அவ்வாங்கு உந்தி, அம்சொல், பாண்மகள்,
நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி மறுகில்
பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயம்கெழு வைப்பிற் பல்வேல் எவ்வி
நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான்,
பொன்இணர் நறுமலர்ப் புன்னை வெஃகி,
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ, நீயே-கிளி எனச்
சிறிய மிழற்றும் செவ்வாய், பெரிய
கயல்என அமர்த்த உண்கண், புயல்எனப்
புறம்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்,
மின்நேர் மருங்குல், குறுமகள்
பின்னிலை விடாஅ மடம்கெழு நெஞ்சே? 
 

என்பது உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது;  அல்ல  குறிப்பிட்டு  அழிந்ததூஉம்  ஆம்;  தோழியைப்
பின்னின்ற  தலைமகன்  தன்  நெஞ்சிற்குச்  சொல்லியதூஉம்  ஆம். -
நக்கீரர்
 

 
இலங்குவளை நெகிழச் சாஅய், அல்கலும்,
கலங்கு அஞர் உழந்து, நாம்இவண் ஒழிய
வலம்படு முரசிற்