அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   378
Zoom In NormalZoom Out


 
சேர லாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்புஅறுத்து, இமயத்து
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து,
நல்நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ, அன்று அவண்
நிலம்தினத் துறந்த நிதியத்து அன்ன
ஒருநாள் ஒருபகற் பெறினும், வழிநாள்
தங்கலர் - வாழி, தோழி!-செங்கோற்
கருங்கால் மராத்து வாஅல் மெல்இணர்
சுரிந்துவணர் பித்தை பொலியச் சூடி,
கல்லா மழவர் வில்இடம் தழீஇ,
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
பழிதீர் காதலர் சென்ற நாட்டே. 
 

என்பது பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
- மாமூலனார்
 

 
மன்றுபாடு அவிந்து மனைமடிந் தன்றே;
கொன்றோ ரன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொளவரின் கனைஇ, காமம்
கடலினும் உரைஇ, கரைபொழி யும்மே.
எவன்கொல் வாழி, தோழி!-மயங்கி
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,
இறும்புபட்டு இருளிய இட்டுஅருஞ் சிலம்பில்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடி,
கான நாடன் வரூஉம், யானைக்
கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறுநெறி,
மாரி வானம் தலைஇ நீர்வார்பு,
இட்டு அருங் கண்ண படுகுழி இயவின்,
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர்
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே?
 

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர்
 

 
'உள்ளல் வேண்டும் ஒழிந்தபின்' என
நள்ளென் கங்குல் நடுங்குதுணை ஆயவர்
நின் மறந்து உறைதல் யாவது? 'புல்மறைந்து
அலங்கல் வான்கழை உதிர்நெல் நோக்கி
கலைபிணை விளிக்கும் கானத்து ஆங்கண்,
கல்சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப்
பொதிவயிற்று இளங்காய் பேடை ஊட்டி,
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண்காழ்
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும்
கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்ப,
கொழுப்புஆ தின்ற கூர்ம்படை மழவர்,
செருப்புடை அடியர், தெண்சுனை மண்டும்
அருஞ்சுரம் அரிய அல்ல; வார்கோல்