|
திருந்து இழைப் பணைத்தோள், தேன்நாறு கதுப்பின், குவளை உண்கண், இவளொடு செலற்கு' என நெஞ்சுவாய் அவிழ்ந்தனர் காதலர்- அம்சில் ஓதி
ஆயிழை!-நமக்கே.
என்பது பிரிவிடை
வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -
குடவாயிற் கீரத்தனார்.
அம்ம வாழி, கேளிர்! முன் நின்று கண்டனிர் ஆயின், கழறலிர் மன்னோ- நுண்தாது பொதிந்த செங்காற் கொழு முகை முண்டகம் கெழீஇய மோட்டுமணல் அடைகரை, பேஎய்த் தலைய பிணர்அரைத் தாழை எயிறுடை நெடுந்தோடு காப்ப, பலஉடன் வயிறுடைப் போது வாலிதின் விரீஇ, புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின் இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம் கவர்நடைப் புரவி கால்வடுத் தபுக்கும் நல்தேர் வழுதி கொற்கை முன்துறை வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தற் போது புறங் கொடுத்த உண்கண் மாதர் வாள்முகம் மதைஇய
நோக்கே.
என்பது கழறிய
பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர்
மறுத்தது. -
வெண்கண்ணனார்
'விசும்புஉற நிவந்த மாத்தாள் இகணைப் பசுங்கேழ் மெல்இலை அருகுநெறித் தன்ன, வண்டுபடுபு இருளிய, தாழ்இருங் கூந்தல் சுரும்புஉண விரிந்த பெருந்தண் கோதை இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என வீளை அம்பின் விழுத்தொடை மழவர் நாள்ஆ உய்த்த நாமவெஞ் சுரத்து நடை மெலிந்து ஒழிந்த சேண்படர் கன்றின் கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர் பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் வெருவரு தகுந கானம், 'நம்மொடு வருக' என்னுதி ஆயின், வாரேன்; நெஞ்சம்! வாய்க்கநின்
வினையே.
என்பது பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார்
ஏனலும் இறங்குகுரல் இறுத்தன; நோய்மலிந்து, ஆய்கவின் தொலைந்த, இவள்நுதலும்; நோக்கி ஏதில மொழியும், இவ்ஊரும்; ஆகலின், களிற்றுமுகம் திறந்த கவுளுடைப் பகழி, வால்நிணப் புகவின், கானவர் தங்கை அம்பணை மென்தோள் ஆய்இதழ் மழைக்கண் ஒல்குஇயற் கொடிச்சியை நல்கினை ஆயின், கொண்டனை சென்மோ
|