அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   380
Zoom In NormalZoom Out


 
நுண்பூண் மார்ப!
துளிதலைத் தலைஇய சாரல் நளிசுனைக்
கூம்புமுகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை
வேங்கை விரிஇணர் ஊதி, காந்தள்
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
இருங்கவுட் கடாஅம் கனவும்,
பெருங்கல் வேலி, நும் உறைவுஇன் ஊர்க்கே.
 

தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு
நின்று, வரைவு கடாயது. - தாயங்கண்ணனார்.
 

 
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
புன்தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம்பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல்நாள் வேங்கைவீ நன்கனம் வரிப்ப,
கார்தலை மணந்த பைம்புதற் புறவின்,
வில்எறி பஞ்சியின் வெண்மழை தவழும்
கொல்லை இதைய குறும்பொறை மருங்கில்,
கரிபரந் தன்ன காயாஞ் செம்மலொடு
எரிபரந் தன்ன இலமலர் விரைஇ,
பூங்கலுழ் சுமந்த தீம்புனற் கான்யாற்று
வான்கொள் தூவல் வளிதர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
கொன்ஒன்று வினவினர் மன்னே-தோழி!-
இதல்முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி
கொல்புனக் குருந்தொடு கல்அறைத் தாஅம்
மிளைநாட்டு அத்தத்து ஈர்ஞ்சுவற் கலித்த
வரிமரற் கறிக்கும் மடப்பிணைத்
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.
 

'பிரிவிடை  ஆற்றாளாயினாள்'  எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள்,
'ஆற்றுவல்'   என்பது  பட,  சொல்லியது. -  உறையூர்  மருத்துவன்
தாமோதரனார்
 

 
வானம் வாய்ப்பக் கவினி, கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென,
மணிமருள் பூவை அணிமலர் இடைஇடை,
செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
முல்லை வீகழல் தாஅய், வல்லோன்
செய்கை அன்ன செந்நிலப் புறவின்;
வாஅப் பாணி வயங்குதொழிற் கலிமாத்
தாஅத் தாள்இணை மெல்ல ஒதுங்க,
இடிமறந்து, ஏமதி - வலவ! குவிமுகை
வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை
கடுமான் தேர்ஒலி கேட்பின்,
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே. 
 

என்பது   வினைமுற்றி   மீண்ட   தலைமகன்  பாகற்கு உரைத்தது. -
சீத்தலைச் சாத்தனார்