அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   382
Zoom In NormalZoom Out


 
ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
சிறுபல் கேணிப் பிடிஅடி நசைஇ,
களிறுதொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார் ஆயினும், நினக்கே-
வென்று எறி முரசின் விறற்போர்ச் சோழர்
இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில்
தீஇல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும்பாழ் கொண்டன்று, நுதலே; தோளும்,
தோளா முத்தின் தெண்கடற் பொருநன்
திண்தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
நல் எழில் நெடுவேய் புரையும்
தொல்கவின் தொலைந்தன; நோகோ யானே. 
 

என்பது  'தலைமகன் பிரியும்'  எனக்  கருதி வேறுபட்ட தலைமகட்குத்
தோழி சொல்லியது.- உறையூர் முதுகூத்தனார்
 

 
இகுளை! கேட்டிசின், காதல்அம் தோழி!
குவளை உண்கண் தெண்பனி மல்க,
வறிதுயான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிதுஒன்று கடுத்தனள் ஆகி-வேம்பின்
வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி,
உடலுநர்க் கடந்த கடல்அம் தானை,
திருந்துஇலை நெடுவேற் தென்னவன்-பொதியில்,
அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியின்
ததும்பு சீர் இன்இயம் கறங்க, கைதொழுது,
உருகெழு சிறப்பின் முருகுமனைத் தரீஇ,
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ? - நீடு
நின்னொடு தெளித்த நல்மலை நாடன்
குறிவரல் அரைநாட் குன்றத்து உச்சி,
நெறிகெட வீழ்ந்த துன்அருங் கூர்இருள்,
திருமணி உமிழ்ந்த நாகம் காந்தட்
கொழுமடற் புதுப்பூ ஊதும் தும்பி
நல்நிறம் மருளும் அருவிடர்
இன்னா நீள்இடை நினையும், என் நெஞ்சே.
 

தலைமகன்   சிறைப்புறத்தானாகத்   தோழிக்குச்   சொல்லுவாளாய்த்
தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார்.
 

 
துஞ்சுவது போல இருளி, விண்பக
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு
ஏறுவது போலப் பாடுசிறந்து உரைஇ,
நிலம்நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு,
ஆர்தளி பொழிந்த வார் பெயற் கடைநாள்;
ஈன்று நாள் உலந்த வாலா